முந்தய பக்கம்

கட்சி நிதி ரூ.13.46 லட்சம் வழங்கிய சிபிஎம் குமரி மாவட்டக்குழு

28 Dec 2025, 5:05 pm
கட்சி நிதி ரூ.13.46 லட்சம் வழங்கிய சிபிஎம் குமரி மாவட்டக்குழு
<p><strong>கட்சி நிதி ரூ.13.46 லட்சம் வழங்கிய சிபிஎம் குமரி மாவட்டக்குழு</strong></p> <p>நாகர்கோவில், டிச.28- கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் திரட்டிய கட்சி நிதி ரூ. 13.46 லட்சம் &nbsp;அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் முதல் கட்டமாக ஒப்படைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் அரசியல் விளக்க பேரவை பார்வதிபுரத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் டிசம்பர் 28 ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதுமிருந்து பொதுமக்களிடம் &nbsp;திரட்டப்பட்ட ரூ. 13 லட்சத்து 46 ஆயிரத்து 490 கட்சி நிதி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது. &nbsp;இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், என்.ரெஜீஸ்குமார், வட்டாரச் செயலாளர்கள் மிக்கேல், அருணாச்சலம், ராஜ்குமார், ராஜு, மூத்த தலைவர் என்.முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram