சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு பேரவை
20 Nov 2025, 3:46 pm
<p><strong>சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு பேரவை</strong></p>
<p>கிருஷ்ணகிரி, நவ.20 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் சிறப்புப் பேரவை, மாவட்டச்செயலாளர் சி.சுரேஷ் தலைமையில் ஊத்தங்கரையில் நடை பெற்றது. இந்தப் பேரவையில், சாதி மறுப்புக் காதல் திருமணத்திற்கு எதிராக ஊத்தங்கரையில் தாயையும், மகன் சுபாஷையும் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளி தண்டபாணிக்கு 3 ஆயுள் தண்டனைகளை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் விளக்க உரை யாற்றினர். முன்னாள் நீதியரசர் கே.சந்துருவின் கருத்தரங்க உரையை மூத்த எழுத்தாளர் கமலாலயன் தொகுத்த “இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று?” என்ற தலைப்பிலான புத்தகம் பேரவை யில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கமலாலயனுக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சால்துவை அணிவித்து கவுரவித்தார். இந்தச் சிறப்புப் பேரவையில், சிபிஎம் மாவட்ட செயற்குழுவில் நாகராஜ்ரெட்டி, ஸ்ரீதர் ஆகியோரும் மாவட்டக்குழுவில் புருஷோத்தமரெட்டி, டி.எம்.ராதா ஆகி யோரும் இணைக்கப்பட்டனர். முன்னதாக வட்டச் செயலாளர் சபாபதி வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.</p>
