முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

28 Feb 2026, 2:29 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் கேரளம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன்

இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலகை ‘எரித்துக்’ கொண்டிருக்கிறார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் (ஈரான் மீதான தாக்குதல்) உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. பிரதமர் மோடியின் ‘நல்ல நண்பர்கள்’ இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணி இன்னும் அவமானகரமானது.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி

பிரதமரின் இஸ்ரேல் பயணம் முற்றிலும் தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போகிறது என்பதை நேதன்யாகு பிரதமரிடம் தெரிவித்தாரா என்பதையும் அவர் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடியது. எங்கள் மாநில வீரர்கள் இந்திய தேசிய அணிக்காக விளையாட அழைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இருவர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்.

Share
FacebookXWhatsAppTelegram