சிபிஎம் கடம்பூர் செயலாளர்கள் தேர்வு
31 Oct 2026, 12:09 am
<p><strong>சிபிஎம் கடம்பூர் செயலாளர்கள் தேர்வு</strong></p><p>ஈரோடு, அக்.30-மார்க்சிஸ்ட் கட்சியின் கடம்பூர் இடைக்கமிட்டி பிரிக்கப்பட்டு, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைகூட்டம், தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில், கடம்பூர் இடைக்கமிட்டியானது, கடம்பூர் கிழக்கு கமிட்டி மற்றும் கடம்பூர்மேற்கு கமிட்டி என இரண்டாக பிரிக்கப்பட்டது. கடம்பூர் கிழக்கு கமிட்டிக்கு 9பேர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய செயலாளராக பி.தங்கவேல் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் கடம்பூர் மேற்கு கமிட்டியின் உறுப்பினர்களாக 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக பி.சடையப்பன் தேர்வு செய்யப்பட்டார். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், சி.துரைசாமி, ஜி.பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
