தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தல்

1 Nov 2026, 1:37 am
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தல்

சென்னை, அக். 31 –விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தக் குழு அமைக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தி உள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சனிக்கிழமையன்று (அக். 31) குறளகம் முன்பு சிபிஎம் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி செய்தி யாளர்களிடம் கூறியதாவது;

தேசிய அளவில் உணவுப்பொருட்க ளின் பணவீக்கம் 7 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழகத்தில் 10.6 விழுக்காடாக உள்ளது. கர்நாடக,ஆந்திராவிலிருந்து அரிசி வரத்துகுறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால் அந்த மாநிலங்களில் விலை உயரவில்லை.

40 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளது குறித்து பொருளாதார நிபுணர் கலையரசன் எழுப்பிய கேள்விகளையே மார்க்சிஸ்ட் கட்சியும் எழுப்புகிறது? அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் சிலர் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக நிதி அமைச்சர் கூறுகிறார். அதன் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அத்தியாவசிய பொருள் பாது காப்பு சட்டத்திலிருந்து அரிசி, வெங்காயத்தை ஒன்றிய பாஜக அரசு நீக்கிவிட்டது. பெட்ரோலிய பொருட்கள், கலால், செஸ், சர்சார்ஜ் போன்ற மறைமுக வரி உயர்வு

தான் உணவு பொருட்களின் விலை யேற்றத்திற்கு காரணம். தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்க வேண்டும். மாநில அரசு மானியம் கொடுக்க வேண்டும்.

இந்த விலை உயர்வால் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் எப்படி கொண்டாட முடியும்? விலைவாசியை கட்டுப்படுத்த உடனடியாக அதிகாரிகள், பொருளாதார நிபு ணர்கள், வர்த்தக அமைப்பு தலைவர்கள், விவசாய சங்க தலைவர்களை கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தவெக அரசு உடனடியாக கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு தமிழ கத்திற்கு தேவையான மானியங்களை கொடுக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை ஒன்றிய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.

30 ரூபாய் சன்ன ரக அரிசி அறிவிப் போடு உள்ளது. கூடுதல் சன்ன ரக அரிசி இறக்குமதி செய்து ரேசன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்ய வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ சர்க்கரை கொடுக்க வேண்டும். அதிகரித்துள்ள பால் பொருட்களை ரேசன் கடை மூலம் பாதி விலைக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பி னர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன், வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணுகோபாலன், மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.