அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதில் சிபிஎம் உறுதியாக உள்ளது
14 Mar 2026, 2:57 pm
<p><strong>அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதில் சிபிஎம் உறுதியாக உள்ளது</strong></p>
<p>இராமநாதபுரம், மார்ச் 14- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்தியச் சரணாகதிக்கு எதிராக, வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக உறுதியாக உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடை பெற்ற கட்சியின் தேர்தல் நிதி அளிப்பு மற்றும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார். சட்டமன்றப் பணியில் முன்மாதிரி இக்கூட்டத்தில் பேசிய பெ. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பகத்தன்மையை உறு திப்படுத்தினார். “எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தல் செலவிற்காகத் தங்களின் ஒரு பைசாவைக் கூடச் செலவிட அனு மதிப்பதில்லை; கட்சிதான் அனைத்துச் செலவுகளையும் ஏற்கும். அதனால் தான் எங்கள் பிரதிநிதிகள் மீது ஊழல் கறையில்லை” என்று அவர் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், சட்டமன்ற வருகைப் பதிவேட்டில் 91 சதவீதப் பங்களிப்புடன், மக்கள் பிரச்சனைகளைப் பதிவு செய்வ தையே பிரதானப் பணியாகக் கொண்டு இடதுசாரி எம்எல்ஏக்கள் செயல்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற அலுவலகத்தைத் தனது லாப நோக்கம் கொண்ட வணி கத் தலமாகப் பார்க்கும் பிற சித்தாந்த வாதிகளிடமிருந்து கம்யூனிஸ்டுகள் தனித்து நிற்பதாகவும் கூறினார். ஒன்றிய அரசின் பொய் பரப்புரையும் சர்வதேச நெருக்கடியும் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்ச் சூழல் குறித்துப் பேசிய அவர், இந்தியப் பிரதமரும் பாஜகவினரும் அப்பட்டமான பொய்களைத் தகவலா கக் கூறி வருவதாகச் சாடினார். ஈரான் தலைவர்களுடன் பேசிவிட்டதாகவும், கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பில்லை என்றும் பிரதமர் கூறிய தகவல் அடுத்த நாளே ஈரானால் மறுக்கப்பட்டு, அம்பலமாகியுள்ள தாகக் குறிப்பிட்டார். “இந்தியா தற்போது அமெரிக்கா விடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த நாடாக மாறிவிட்டது” என்று விமர்சித்த அவர், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்க ளின் துயரம் தீர, இந்த யுத்தம் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். வெறுப்பு அரசியலுக்கு எதிரான களப்போர் மேலும் கேரளாவில் நூற்றுக்க ணக்கான தோழர்களைப் பலி கொடுத்தும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் கருத்தியல் ரீதியாகவும் கள ரீதியாகவும் சிபிஎம் தொடர்ந்து போராடி வருவதைச் சண்முகம் நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் சாதி, மதம் கடந்து சகோதரத்துவம் நிலைக்க வேண்டுமானால், பாஜகவை நுழைய விடக்கூடாது என்பதில் கட்சி உறுதியாக இருப்பதாகவும், வெறும் கவர்ச்சித் திட்டங்களை மட்டும் பேசி இளைஞர்களைத் திசைதிருப்பும் அரசியலைத் தாண்டி, உலகளாவிய பிரச்சனைகளையும் நாட்டின் இறை யாண்மையையும் காக்க உழைக்கும் வர்க்கம் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலா ளர் ரெ.குருவேல் தலைமையில் 5 லட்சம் ரூபாய் கட்சி நிதிக்கான காசோலை மாநிலச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு மற்றும் வட்டாரக் குழு நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். (ந.நி)</p>
<p> </p>
