சிபிஎம் முயற்சியால் சீரானது மின்விநியோகம் விழுப்புரம் நகர் மக்கள் நிம்மதி
19 Jun 2026, 12:49 am

சிபிஎம் முயற்சியால் சீரானது மின்விநியோகம் விழுப்புரம் நகர் மக்கள் நிம்மதி

விழுப்புரம், ஜூன் 18- விழுப்புரம் நகரத்தில் உள்ள அரசு போக்கு வரத்துக் கழக ஊழி யர் நகரில், பல நாட்க ளாக நீடித்து வந்த குறை வான மின்அழுத்தப் பிரச்சனைக்கு சிபிஎம் கட்சி யின் முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் நகருக்கு, விழுப்புரம் பிடாகம் மின்மாற்றி பீடரிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மின் இணைப்பிற்கான நிலத்தடி கேபிள் (UG Cable) கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், அருகிலுள்ள திருப்பாச்சனூர் மின்மாற்றி பீடரிலிருந்து மாற்று ஏற்பாடாக மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, நாள்தோறும் பல மணி நேரம் மின்தடை மற்றும் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பெரும் அவ திக்குள்ளாகினர்.

கட்சியின் நடவடிக்கை

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி, அப்பகுதியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட்ட செயலாளர் சகாதேவன் தலைமையில், அப்பகுதி மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. அந்த மனுவை மாவட்ட மின்சார அதிகாரியிடம் நேரில் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின்சார வாரிய அதிகாரி கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மீண்டும் விழுப்புரம் பீடரிலிருந்தே மின்சாரம் வழங்குவதற்கான பணி களைத் தீவிரமாக மேற் கொண்டு வருகின்றனர்.