கட்டப்பஞ்சாயத்தில் பறிக்கப்பட்ட ஆடுகள் மீட்பு சிபிஎம் தலையீட்டால் இருளர் இன குடும்பத்திற்கு நீதி
3 Jul 2026, 12:56 am
<p><strong>கட்டப்பஞ்சாயத்தில் பறிக்கப்பட்ட ஆடுகள் மீட்பு சிபிஎம் தலையீட்டால் இருளர் இன குடும்பத்திற்கு நீதி</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 2– சோளிங்கர் வட்டம் ஐபேடு பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து பறிக்கப்பட்ட இருளர் இன குடும்பத்தின் ஆடு களுக்கான பணத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துரித தலையீ ட்டால் காவல் துறை மூலம் மீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஐபேடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் மணி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜூன் 27 அன்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வடிவேலுவின் குடும்பத்தினரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடு பட்டனர். மறுநாள், அவர்க ளது வாழ்வாதாரமான 7 ஆடுகளை வலுக்கட்டாய மாகப் பறித்துச் சென்ற னர். இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திடம் அவர்கள் புகார் அளித்தனர். சங்கத்தின் மாநில செயலாளர் இரா. சர வணன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர். வெங்க டேசன், மாவட்ட குழு உறுப்பினர் ஏபிஎம். சீனிவாசன், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். தொடர்ந்து காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப் பட்டபோது, உதவி ஆய்வா ளர் முனீர் பாஷா அலட்சிய மாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் காவல் ஆய்வாளர் ராமச்சந்திர னிடம் புகார் அளித்தனர். உடனடி நடவடிக்கையாக, ஆய்வாளர் ராமச்சந்திரன் களமிறங்கி விசாரணை நடத்தி, ஆடுகளை விற்ற தொகையான ரூ. 30 ஆயிரத்தை மீட்டு வடிவேலுவின் குடும்பத்தி னரிடம் ஒப்படைத்தார். எளிய மக்களின் துயர் துடைக்க சிபிஎம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் மேற்கொண்ட இந்த அதி ரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே வர வேற்பை பெற்றுள்ளது.</p>
