தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் எஸ்ஐஆர் பணிகளில் நீடிக்கும் குளறுபடி கால அவகாசம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

27 Nov 2025, 3:11 pm
திருப்பூரில் எஸ்ஐஆர் பணிகளில் நீடிக்கும் குளறுபடி கால அவகாசம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
<p>திருப்பூர், நவ.27 - தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் நிறைந் துள்ள திருப்பூர் மாவட்டத்தில் அவசரக் கோலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறு வதால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறு கின்றன. இப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழி யர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். மேலும் &nbsp;ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் இப்பணி யில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு நிர்வாகத் தின் வழக்கமான அன்றாட மக்கள் பணிகள் &nbsp;முடங்கி பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே தேர்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் &nbsp;வழங்கி, குளறுபடியின்றி எஸ்.ஐ.ஆர். பணியை நடத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழ னன்று எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலக்குழு &nbsp;உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுப் (எஸ். ஐ.ஆர்) பணிகளை தேர்தல் ஆணையம், போர் கால வேகத்தில் நடத்தி வருவதாக பத் திரிக்கை செய்திகள், ஆட்சியர் அலுவலக &nbsp;கூட்டங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், வாக்காளர் படிவங்கள் எழுதுவதில் &nbsp;உள்ள தெளிவற்ற நிலை, 2002ஆம் ஆண்டு &nbsp;வாக்குகளைக் கண்டறிய முடியாத நிலை, &nbsp;இன்னும் ஆயிரக்கணக்கான வாக்காளர்க ளுக்கு படிவமே சென்று சேராத நிலை, தமிழ் நாட்டிற்கு தேவையற்ற 13 ஆவது ஆவணம் &nbsp;உள்ளிட்ட 13 ஆவணங்கள் பற்றிய தெளி வின்மை என பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்நிலையில் இந்த சிறப்பு தீவிர சீராய்வுப் பணி அவசரக் &nbsp;கோலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. &nbsp;இது தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமத்தை &nbsp;ஏற்படுத்துகிறது. மேலும், ஆன்-லைனில் &nbsp;மேற்கொள்ள இணையப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை, மற்றவர் உதவியை நாட வேண்டிய சூழல் என வாக்காளர்களிடம் மிகக் &nbsp;கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் போன்ற, தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து புலம்பெ யர்ந்து வந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக் கும் மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளை சரி யான முறையில் நிறைவேற்றுவதற்கு கூடு தல் கால அவகாசம் தேவை. ஒரு வீட்டில் குடி யிருக்கும் தொழிலாளி வேலை நிலைமைக்கு &nbsp;ஏற்ப இரண்டொரு ஆண்டுகளில் வேறொரு பகுதிக்கு குடிபெயர்வது, திருப்பூரில் இயல் பாக உள்ள நிலைமை. அத்தகைய வாக்கா ளர்களைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் உள் ளது. &nbsp;ஒரு வாக்குச்சாவடியில் உள்ள வாக்கா ளர் வேறொரு வாக்குச்சாவடி உள்ள பகு திக்கு குடிபெயர்ந்திருந்தால், அவரிடம் படி வத்தை கொடுக்க மறுப்பதும்; ஒரு வாக்காள ருக்கு இரண்டு படிவங்களுக்குப் பதிலாக ஒரே படிவம் மட்டும் வழங்குவதும்; வாக்கா ளர் படிவத்தில் 2 மற்றும் 3 ஆம் பகுதிகளில் &nbsp;திருமணம் ஆன பெண்கள் 2002 வாக்காளர் பட்டியலில் தமது கணவர் பெயர் உள்ள &nbsp;நிலையில், தந்தையின் பெயரை எழுதச் &nbsp;சொல்வது; உறவு முறையை குறிப்பிடுவதில் &nbsp;குழப்பம்; அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோ சிக்காமல் தானடித்த மூப்பாக தேர்தல் &nbsp;ஆணையம் செயல்படுவது; பெரும்பாலான &nbsp;அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி எஸ்.ஐ. ஆரைத் திணிப்பது; மழைப் பொழிவுக் காலம்; &nbsp; வெளியூர் தொழிலாளர்கள், தங்கள் தொகுதி யில் 2002 வாக்காளர் பட்டியலை சரி பார்ப்ப தற்கான ஏற்பாடுகள் குறைவு போன்ற பல் வேறு காரணங்களால் எஸ்ஐஆர் பணிகள் தொடர்ந்து தொய்வாகவே இருக்கிறது. &nbsp;இது ஒரு புறம் இருக்க, போர் காலத்தில் &nbsp;மேற்கொள்ளப்படும் பணிகளைப் போல, அனைத்து அரசுத் துறைகளும் இந்த ஒரே &nbsp;வேலையை மட்டுமே செய்து வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களும், திட்டப் பணியாளர்களும் கடைநிலை ஊழியர்கள் வரை முழுவதுமாக &nbsp;இந்த எஸ்ஐஆர் பணிகளில் மட்டுமே ஈடுப டுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளில் தலையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போய் &nbsp;அரசு நிர்வா கம் ஸ்தம்பித்து கிடக்கிறது. எனவே, அவசரக் &nbsp;கோலத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற் கொள்ளாமல் நிறுத்தி வைத்து, மக்களின் &nbsp;அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற் கான பணிகளில் அரசு நிர்வாகம் ஈடுபட வேண் டும். மேலும், சரியான, முறையான வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்த பணியைத் திட்ட மிட்ட முறையில், உரிய கால அவகாசம் வழங்கி மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் &nbsp;வலியுறுத்துகிறோம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.