மானாமதுரை விசாரணைக் கைதி ஆகாஷ் லாக்-அப் படுகொலை காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய சிபிஎம் வலியுறுத்தல்!
8 Mar 2026, 3:42 pm
<p><strong>மானாமதுரை விசாரணைக் கைதி ஆகாஷ் லாக்-அப் படுகொலை காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய சிபிஎம் வலியுறுத்தல்!</strong></p>
<p>மானாமதுரை, சென்னை, மார்ச் 8 - மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் ஆகாஷ் (26) சித்திர வதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடி யாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சம்பவப் பின்னணி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இடையே கடந்த மார்ச் 5 அன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக மார்ச் 6 அன்று மதியம் ஆகாஷ் உள்ளிட்ட ஐந்து பேரை மானாமதுரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், அவர்களை எங்கு வைத்துள்ளனர் என்ற விவரத்தைப் பெற்றோ ரிடம் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். கொடூரச் சித்திரவதையும் மரணமும் இந்நிலையில், மார்ச் 7 அன்று இரவு ஆகாஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை தகவல் அளித்துள்ளது. பதறியடித்துச் சென்ற பெற்றோர் ஆகாஷைப் பார்த்தபோது, அவரது கால் முறிக்கப்பட்டிருந் தது. “காவலர்கள் தனது காலின் மீது பெரிய கல்லைப் போட்டு உடைத்துவிட்டதாக” ஆகாஷ் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மகனுக்கு உணவு எடுத்து வரப் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில், மார்ச் 8 காலை ஆகாஷ் உயிரிழந்துவிட்ட தாகத் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற நான்கு பேரும் இராமநாதபுரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். சிபிஎம் கண்டனம் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்து உள்ள அறிக்கையில், “ஆகாஷ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மிகக் கடுமை யான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவரது கால் உடைந்ததி லிருந்து உறுதியாகிறது. காவல்துறையின் இத்தகைய அராஜக நடவடிக்கைகள் தொ டர்வது கண்டிக்கத்தக்கது. மனித உரிமைக்கு எதிரான இக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவல்துறையினர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், ஆகாஷ் குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு வேலை உள்ளிட்ட நிவாரண உதவி களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித் துள்ளார். நெடுஞ்சாலை மறியல் போராட்டம் இப்படுகொலையைக் கண்டித்து ஆகா ஷின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மார்ச் 8 காலை 9 மணி முதல் மதுரை - இராமேஸ்வரம் நெடுஞ்சாலை யில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், மாவட்டக் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இப்போராட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலை வர் த. செல்லக்கண்ணு, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், சிவகங்கை மாவட்டச் செயலா ளர் ஏ.ஆர். மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரபாண்டி, விஜயகுமார், தீஒமு தலைவர்கள் எஸ். முத்துராமலிங்க பூபதி, வி. கருப்புசாமி, வீரையா, முனியராஜ், பரமாத்மான் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றுள்ளனர்.</p>
