ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து சிபிஎம் தெருமுனைக்கூட்டம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து சிபிஎம் தெருமுனைக்கூட்டம்</strong></p>
<p>குழித்துறை, மார்ச் 10- ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் ராணுவத் தாக்குதலை கண்டித்தும். போரை காரணம் காட்டி பொது மக்களை பாதிக்கும் வகையில் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசை கண்டித்தும் 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்காமல் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லூர் வட்டாரக்குழு சார்பில் விளாத்துறை ஊராட்சி குன்னத்தூர் சந்திப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தெருமுனைக் கூட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் எப் ஜாண் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆ.நீலாம்பரன், என்.எஸ்.கண்ணன், வட்டாரச் செயலாளர் எம்.ஜஸ்டின், வட்டாரக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட், ஜோதிஷ் ஆகியோர் பேசினர்.</p>
