ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் பொதுக்கூட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் பொதுக்கூட்டம்</strong></p>
<p>ஈரோடு, பிப்.19- இந்தியாவை அமெரிக் காவிற்கு அடகு வைத்த மோடி அரசை கண்டித்து சிவகிரியில் சிபிஎம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. ஆண்டொன்றுக்கு 46 லட் சம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய உற்பத்தி பொருட் கள், எண்ணெய் மற்றும் பால் பொருட்களை அமெரிக்கா வரியில்லாமல் இந்தியாவில் தாரளமாக இறக்குமதி செய்வதற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளது. இதனை கண்டித்து ஈரோடு மாவட்டம், சிவகிரி அண்ணா மேடையில் புதனன்று மார்க் சிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற் றது. தாலுகா செயலாளர் எம்.சசி தலைமை வகித்தார். தாலுகாக்குழு உறுப்பினர் லோக நாதன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முருகேசன், விவசாயிகள் சங்க தலைவர் கே.கண்ணுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
