அடிப்படைவசதி கேட்டு சிபிஎம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>அடிப்படைவசதி கேட்டு சிபிஎம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச.23- கள்ளக்குறிச்சி நகரத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியிருக்கும் 12வது வார்டு பெரியார் நகரை கண்டுகொள்ளாத நக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (டிச.23)செவ்வாயன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி நகரில் பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரி யார் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங் கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதியின்றி இருட்டில் வாழ்ந்து வரு கின்றனர்.நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின் இணைப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். பெரியார் நகர் 12வது வார்டு மூன்று தெருகளுக்கு கழிவு நீர் கால்வாய்களுடன் சிமெண்ட் சாலை அமைத்து தரவும்,பழைய கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரை சுத்தம் செய்து தரவும்,மாதம் இரு முறை கொசு மருந்து தெளித்து சுகா தாரத்தை பாதுகாத்திடவும், பெரியார் நகரில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிமெண்ட்சீட்டு மற்றும் கீத்து வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கு அரசு கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுக்களை நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க முற்பட்டனர். ஆனால் ஆணையரோ போராட்டக்காரர்களை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிபிஎம் நிர்வாகிகள் மற்றும் பெரியார் நகர் பொதுமக்கள் ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்திற்கு தாமதமாக வந்த ஆணையர் சரவணனிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. மனுக்களின் மீது விசாரணை செய்து உரிய நட வடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த தன் அடிப்படையில் கலைந்து சென்ற னர். இதில் வட்டச் செயலாளர் வெ.ஏழு மலை தலைமை தாங்கினார்.இதில் வட்டக் குழு கே.ஜக்கரியா முன்னி லையும், மாவட்ட செயற்குழு டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன்,மாவட்ட குழு பி.மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.பெரி யார் நகர்ஏ.ரம்யா, எஸ்.வினோலியா, எம்.புவனேஸ்வரி, ஏ.தீபா, எஸ்.ஏ.ரியாஸ் உசேன்,பி.பெரியதம்பி,எம்.கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
