தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊழல் எதிர்ப்பு மக்கள் சந்திப்பு நடைபயணம் புதுச்சேரியில் சிபிஎம் நடத்தியது

20 Feb 2026, 2:39 pm
ஊழல் எதிர்ப்பு மக்கள் சந்திப்பு நடைபயணம் புதுச்சேரியில் சிபிஎம் நடத்தியது
<p><strong>ஊழல் எதிர்ப்பு மக்கள் சந்திப்பு நடைபயணம் புதுச்சேரியில் சிபிஎம் நடத்தியது</strong></p> <p>புதுச்சேரி, பிப். 20- புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்ட ணியின் ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் வெள்ளியன்று (பிப்.20) &nbsp;நடைபெற்றது. ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யவுள்ள என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்றாததைக் கண்டி த்தும், போலி மருந்து தொழிற்சாலை குற்ற வாளிகளுக்குப் பக்கபல மாகச் செயல்பட்ட ஆட்சி யாளர்களை அம்பலப் படுத்தியும் இந்த இயக்கம் நடைபெற்றது. மேலும், ஏழை எளிய மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு களைக் கட்டிக் கொடுக்க வேண்டும், அதுவரை அரசு வாடகை மானியம் வழங்க வேண்டும், அரசுப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வேலை யில்லா வாலிபர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் புதுச்சேரி அரியாங் குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் தொடங்கிய நடை பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஒருங்கி ணைப்பாளர் வெ. பெரு மாள் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் ஜோதிபாசு, சரவணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இளவரசி, சரவணன் உட்படப் பலர் நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்டனர். அரியாங்குப்பத்தில் தொடங்கிய நடைபயணம் முருங்கப்பாக்கம், முத லியார்பேட்டை, அண்ணா சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களைச் சந்தித்துத் துண்டுப் பிரசுரம் வழங்கிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வில்லியனூர் வில்லியனூரில் தொட ங்கிய நடைபயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணாடிப் &nbsp;பட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், கொளஞ்சி யப்பன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ராமமூர்த்தி, ராம்ஜி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சங்கர், மதிவாணன், பிரேம தாசன், மாரிமுத்து, ஆனந்து, சஞ்சய் உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர். சுல்தான்பேட்டை, அரு மாத்துபுரம், உழவர்கரை, ரெட்டியார்பாளையம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளில் இந்தப் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இரண்டு மையங்களில் இருந்து தொடங்கிய மக்கள் சந்திப்பு நடைபயணம், பிள்ளைத்தோட்டம் பெரி யார் சிலையில் ஒன்றாகச் சங்கமித்தது. பின்னர் அங்கிருந்து புதுச்சேரி சட்டப்பேரவையை நோக்கி வெள்ளிக்கிழமை மாலை ஊர்வலமாகச் சென்றனர். நேரு வீதி மற்றும் மாதா கோவில் வீதி சந்திப்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்தின் இறுதியில், தலைமைச் செயலாளர் சரத்சவுகானைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.