முந்தய பக்கம்

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாழ்த்து

8 Apr 2026, 5:30 am
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாழ்த்து

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாழ்த்து

கரூர், ஏப். 7- அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ, புகளூர் ஊராட்சி பகுதியில் உள்ள செம்படாபாளையம், புகளூர் நான்கு ரோடு, ஓலப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம், திமுக வேட்பாளர் மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுக ஒன்றியச் செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram