தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆந்திர பழங்குடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிகரித்து வரும் ஆதரவு

13 Nov 2026, 10:31 pm
ஆந்திர பழங்குடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிகரித்து வரும் ஆதரவு

ஆந்திர பழங்குடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிகரித்து வரும் ஆதரவு

விசாகப்பட்டினம்ஆந்திர மாநிலத்தின் ஏஜென்சி என அழைக்கப்படும் மலைவாழ் பழங்குடியினர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள முன்சிங்கி புட்டுமாவட்ட ஊராட்சி வார்டில், சிபிஎம் வேட்பாளர் கொர்ரா திரிநாத் 3,426 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். திரிநாத் 10,161 வாக்குகளைப் பெற்றார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 6,735 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.முன்சிங்கிபுட்டு மட்டுமின்றி பல மாவட்ட ஊராட்சி வார்டுகளில் சிபிஎம் வலுவான வாக்குகளை பெற்றுள்ளது.குறிப்பாக பல வார்டுகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான பாஜக கூட்டணி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்ஆகிய இரு தரப்பிற்கும் கடும் போட்டியை அளித்தது.

கடும் போட்டி அளித்த சிபிஎம்ஜி.கே. வீதி மாவட்ட ஊராட்சி வார்டில் சிபிஎம் வேட்பாளர் ஏ.புஜ்ஜி பாபு 5,193 வாக்குகளுடன் இரண்டாம்இடத்தையும், ராஜவொம்மங்கியில் சிபிஎம் வேட்பாளர் லோதா ராமராவ் 5,254 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அதே போல அரக்கு பள்ளத்தாக்கு, தும்ரிகுடா மற்றும் வி.ஆர்.புரம்மாவட்ட ஊராட்சிவார்டுகளிலும் சிபிஎம் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

போராட்டத்திற்கு கிடைத்த வாக்குகள்ஆந்திர மாநிலத்தில் பழங்குடி யினரின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நிலம், வாழ்வாதாரம் மற்றும்அரசியலமைப்புப் பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கொள்கைகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறது. இந்தப் போராட்டங் களுக்குப் பழங்குடியின மக்களிடையே ஆதரவு பெருகி வருவதையே உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பழங்குடியினர் உரிமைகளைப் பாதிக்கும் பாக்சைட் சுரங்கம் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு எதிராக சிபிஎம் தொடர்ந்து போராடி வருகிறது. மேலும், அரசாணை எண் 3-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், போலாவரம் திட்டத்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அளிக்கவும், ‘போடு’ (Podu - மாற்றுப் பயிர் சாகுபடி) நிலங்களில் விவசாயம் செய்யும் பழங்குடியினருக்கு நிலப் பட்டா வழங்கவும் சிபிஎம் கட்சி வலுவாக போராடியுள்ளது. ஐந்தாவது அட்டவணைப் பகுதிகளில் 1/70 சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்கவும், பழங்குடியினர் பகுதிகளில் ஆசிரியர் நியமனத்திற்கான சிறப்பு டி.எஸ்.சி தேர்வை நடத்தவும் சிபிஎம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இத்தகைய வலுவான போராட்டங்களால் ஆந்திராவின் பழங்குடியினர் பகுதிகளில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.