திருச்சியில் சிபிஎம் நிதியளிப்பு பேரவை கூட்டம்
15 Dec 2025, 5:05 pm
<p><strong>திருச்சியில் சிபிஎம் நிதியளிப்பு பேரவை கூட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில், கட்சி நிதியளிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டு நிதியளிப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கட்சி நிதியாக ரூ.11 லட்சம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டு நிதியாக ரூ.4 லட்சத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சம்பத், மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினார். பிஎச்இஎல் பகுதியில் கட்சிநிதி உண்டியல் வசூலில் கடந்த ஒரு மாதமாக கலந்து கொண்ட குழந்தைகளை மாநிலச் செயலாளர் பாராட்டி கௌரவித்தார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முன்னிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் 21 பேர் கட்சியில் இணைந்தனர். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிதம்பரம், சுப்ரமணியன், மல்லிகா, பன்னீர்செல்வம், பாண்டியன், ரஜினிகாந்த், தியாகராஜன், முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
