தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் கொடியேற்று விழா - நிதியளிப்பு

5 Feb 2026, 3:40 pm
சிபிஎம் கொடியேற்று விழா - நிதியளிப்பு
<p><strong>சிபிஎம் கொடியேற்று விழா - நிதியளிப்பு</strong></p> <p>மதுரை, பிப்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு 1வது பகுதிக்குழு &ndash; வி.அண்ணா நகர் கிளை சார்பில் கொடியேற்று விழா &nbsp;விளாங்குடி அண்ணாநகர் மெயின் வீதி யில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எல்.ஸ்டாலின் &nbsp;தலைமை வகித்தார். ஆர்.அசோக் குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் &nbsp;செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பகுதிக்குழு செயலா ளர் வி.கோட்டைசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தி.நாகராஜன் (மேயர்), &nbsp;டி.குமரவேல் எம்.சி., முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கா.திலகர், பா. பழனியம்மாள், பகுதிக்குழு உறுப்பி னர்கள் டி.ஆறுமுகப்பெருமாள், அ. பாவெல்சிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசியோர், விளாங்குடி &nbsp;அண்ணாநகர் பகுதியில் நீண்டகால மாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, சேதமடைந்த சாலைகள், குப்பை அகற்றுவதில் உள்ள குறைபாடுகள் மற் &nbsp;றும் பட்டா வழங்கல் தொடர்பான பிரச்ச னைகளை மதுரை மாநகராட்சி நிர்வா கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும், மக்களின் அடிப்படை தேவை கள் புறக்கணிக்கப்படுவதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்கள் இயக்கங்களின் மூலம் முன் வைக்கும் என்றும் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் மா.கணேசன் &nbsp;பேசுகையில், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மற்றும் நத்தம் &nbsp;புறம்போக்கு பகுதிகளில் நீண்டகால மாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா &nbsp;வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் இயக்க மாக முன்னெடுத்ததன் விளைவாக, தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட் &nbsp;டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள தாக தெரிவித்தார். பட்டா பெறாத மக்க ளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார். மதுரை நகரில் மத உணர்வுகளை தூண்டி அமைதியை குலைக்க முயற்சி கள் நடைபெறுவதாகவும், தமிழ்நாடு &nbsp;மதச்சார்பின்மை மற்றும் சமூக ஒற்றுமை நிலைப்பாட்டில் தொடர &nbsp;வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார். தனியார்மயம், விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர் உரிமை களை குறைக்கும் அதிமுக மற்றும் &nbsp;பாஜக அரசியல், மக்கள் பிரச்சனை களை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனை ஏழை மக்களுக்கு முக்கிய மருத்துவ சேவைகளை வழங்கி வருவ தாகவும், அதற்காக முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பொ.மோகன் மற்றும் &nbsp;தற்போதைய நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இப்பகுதி பொதுமக்கள் வழங்கிய ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் நிதிக்கு நன்றி தெரிவித்தார். &nbsp;முன்னதாக, பொதுமக்களிடமி ருந்து பெறப்பட்ட ரூ.3.25 லட்சம் நிதி &nbsp;மாவட்டச் செயலாளர் மா.கணேசனி டம் பகுதிக்குழு சார்பில் வழங்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.