கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட விஷாலின் குடும்பத்திற்கு சிபிஎம் நிதியுதவி
2 Jul 2026, 10:15 pm
<p><strong>கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட விஷாலின் குடும்பத்திற்கு சிபிஎம் நிதியுதவி</strong></p><p>திருப்பத்தூர், ஜூலை 2- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, சிங் கம்புணரி அருகே உள்ள சதுர்வேதமங்கலத்தில் உயி ரிழந்த விஷாலின் குடும்பத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப் பட்டது. சதுர்வேதமங்கலத்தைச் சேர்ந்த விஷால் (17) கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு வீடு புகுந்து வந்த 12 பேர் கொண்ட கும்பலால் தாக் கப்பட்டு கொலை செய்யப் பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், விஷாலை இருசக் கர வாகனத்தில் தூக்கிச் சென்று, வீட்டருகே உள்ள ஆலமரத்தில் வேட்டியால் தூக்கிலிட்டு கொலை செய் ததாகவும் அவர்கள் தெரி வித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தற் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டதாக கூறி, கொலைக்கு காரணமான வர்களை கைது செய்ய வலி யுறுத்தி, கடந்த மே 21-ஆம் தேதி சிங்கம்புணரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 10-ஆம் தேதி சதுர்வேதமங்கலம் காவல்நிலையத்தை 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை யிட்டனர். இந்நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுவினர், புதி தாக பொறுப்பேற்ற காவல் துறை துணைக் கண்காணிப் பாளர் ஏ.பி.சண்முகசுந்த ரத்தை சந்தித்து, விஷாலின் மரணம் குறித்து நேர்மை யான விசாரணை நடத்த வேண் டும் என வலியுறுத்தினர். பின்னர், சதுர்வேதமங்க லத்தில் உள்ள விஷாலின் இல்லத்திற்குச் சென்று அவ ரது குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்ததுடன், வழக் குச் செலவுகள் மற்றும் குடும் பத் தேவைகளுக்காக ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் வழங் கினர். இந்த நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.அர்ஜுனன், எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கருப்புசாமி, வீர பாண்டி, சேதுராமன், முத்து ராமலிங்க பூபதி, சுரேஷ், அமானுல்லா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சத்திய சீலன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிங்கம் புணரி தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சாந்தி, லெட் சுமி, தேன்மொழி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
