முந்தய பக்கம்

தேநீர் கடை அச்சுதன் குடும்ப பாதுகாப்பு நிதி: சிபிஎம் சார்பில் ரூ.58 ஆயிரம் வழங்கல்

17 Jun 2026, 10:33 pm
தேநீர் கடை அச்சுதன் குடும்ப பாதுகாப்பு நிதி:  சிபிஎம் சார்பில் ரூ.58 ஆயிரம் வழங்கல்
<p><strong>தேநீர் கடை அச்சுதன் குடும்ப பாதுகாப்பு நிதி: சிபிஎம் சார்பில் ரூ.58 ஆயிரம் வழங்கல்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தோழர் அச்சுதனின் குடும்பத்தி னருக்குக் கட்சி சார்பில் ரூ.58 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது. நெருக்கடி நிலைக்கு முன்பே கட்சியில் இணைந்து, திருவள்ளூர் நகர்க் கிளைச் செயலாளராகவும், வட்டக் குழு உறுப்பின ராகவும் பணியாற்றியவர் டீக்கடை தொழி லாளி தோழர் அச்சுதன். வயது மூப்பு காரண மாகக் கடந்த பிப்ரவரி 4 அன்று காலமான அவரது நினைவாக, திருவள்ளூர் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் இந்த நிதி உதவி வழங்கப்பட்டது. தோழர் அச்சுதனின் மனைவி சரஸ்வதி யிடம் இந்நிதியினை வழங்கிய போது, மூத்த தோழர்கள் ப.சுந்தரராசன், கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ் அரசு, வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினர் இ.எழிலரசன், வட்ட குழு உறுப்பினர்கள் கலைவாணி, சின்ராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram