‘சன் ராஜா ஆயில் மில்லை’ மூடக்கோரிஜூன் 29இல் சிபிஎம், விச காத்திருப்பு போராட்டம்!'
26 Jun 2026, 1:38 am
<p><strong>‘சன் ராஜா ஆயில் மில்லை’ மூடக்கோரிஜூன் 29இல் சிபிஎம், விச காத்திருப்பு போராட்டம்!'</strong></p><p>ஈரோடு, ஜூன் 25- ஈரோடு அருகே மூலக்கரை பகு தியில் செயல்பட்டு வரும் ‘சன் ராஜா ஆயில் மில்’ நிறுவனத்தால் நிலத்தடி நீர், காற்று மாசுபடு வதைக் கண்டித்தும், பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியு றுத்தியும் வரும் ஜூன் 29 முதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. விவசாயம் சார்ந்த மூலக்கரை மற்றும் கூரபாளையம் கிராமங்க ளில், இந்த ஆயில் மில்லில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத் தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. காற்று மாசுபட்டு துர்நாற் றம் வீசுவதால் பொதுமக்கள் சுவா சிக்க முடியாமல் அவதிப்படுகின்ற னர். மண் வளம் மற்றும் தென்னை விவசாயம் பாழாகியுள்ளதுடன், கால்நடைகளும் மலட்டுத்தன் மைக்குள்ளாகி வருகின்றன. உயிருக்கே அச்சுறுத்தலாக மாறி யுள்ள இந்த ஆலைக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து 2009, 2013, 2016, 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி, விதிமீறல்கள் காரணமாக ஆலைக்கு தடையும் விதித்தது; மின் இணைப்பும் துண்டிக்கப்பட் டது. ஆயினும், ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற் றும் ஜமாபந்தியில் மனு அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆலையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளின் உறு தித்தன்மை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், சுற்றுவட்டாரக் கிணறுகளில் நீர் மாதிரிகளை சேக ரித்து சோதனைக்கு அனுப்பியுள்ள னர். இந்நிலையில், கார்ப்பரேட் நிறு வனத்திற்கு சாதகமாக செயல் படாமல், மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் உடனடியாக ஆலையை நிரந் தரமாக மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன் 29 முதல் காத் திருப்பு போராட்டம் நடத்த சிபிஎம் மற்றும் விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
