மன்னார்குடி தொகுதி வேட்பாளர் டிஆர்பி ராஜாவிற்கு அமோக ஆதரவு சிபிஎம் கருத்து
5 Apr 2026, 5:18 pm
<p><strong>மன்னார்குடி தொகுதி வேட்பாளர் டிஆர்பி ராஜாவிற்கு அமோக ஆதரவு சிபிஎம் கருத்து</strong></p>
<p>மன்னார்குடி, ஏப். 5- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜாவுக்கு, நகரம் மற்றும் கிராமங்களில் பெருகும் அமோக ஆதரவு வெளிப்படையாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி சிபிஎம் பொறுப்பாளருமான கே.பி. ஜோதி பாசு கூறுகையில், “நீர்வளத்துறை சார்பாக மூவர்கோட்டை ரெகு லேட்டர் ரூ.1 கோடியே 40 லட்சத்திற்கும், பருத்தி க்கோட்டை ரெகுலேட்டர் ரூ.5 கோடிக்கும், தலையா மங்கலம் வடிகால் ரூ.1 கோடிக்கும், கொண்டியாறு வாய்க்கால் ரூ.11 கோடிக்கும், பழைய நீடாம ங்கலம் வாய்க்கால் ரூ.2.5 கோடிக்கும், தென்பரை வாய்க்கால் ரூ.4.5 கோடிக்கும், எளவனூர் மற்றும் மணல்போக்கி ஆகியவை ரூ.95 லட்ச த்திற்கும், ரூ.26 கோடியே 25 லட்சத்திற்கு மறுகட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை, விவசாயிகள் மத்தியில் முழு மனநிறைவை ஏற்படு த்தியுள்ளன. டி.ஆர்.பி. ராஜா மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டால், விவசா யிகளின் கோரிக்கைகளும், தேவைகளும் இன்னும் நிறைய நிறைவேற்றப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியா கிவிட்டது’’ என்று தெரிவித்தார்.</p>
