முந்தய பக்கம்

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் சிபிஎம் நிர்வாகிகள் விடுதலை

28 Jan 2026, 2:33 pm
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் சிபிஎம் நிர்வாகிகள் விடுதலை
<p><strong>டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் சிபிஎம் நிர்வாகிகள் விடுதலை</strong></p> <p>கோவை, ஜன.28- டாஸ்மாக்கடைக்கு எதிரான போராட்டத்தில், காவல் துறையினர் சிபிஎம் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை வடக்கு நகரக் குழு சார்பில் 23-04-2018 அன்று கணபதி சங்கனூர் சாலையில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். அதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டனர். அந்த வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி கோபால் சங்கர் நடத்தி வந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை புதனன்று நடைபெற்றது. இதில், வழக்கை தள்ளுபடி செய்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் விடுதலை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு நகரக் குழு செயலாளர் எஸ்.நாராயணசாமி, கிளைச் செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் எந்தவித பிரதிபலனும் பாராமல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வெற்றி பெற்றுதந்த வழக்கறிஞர்கள் கோபால்சங்கர், வினித், சூர்யா ஆகியோருக்கு &nbsp;நன்றி தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram