திமுக வேட்பாளருடன் சிபிஎம் நிர்வாகிகள் சந்திப்பு
3 Apr 2026, 6:05 pm
<p><strong>திமுக வேட்பாளருடன் சிபிஎம் நிர்வாகிகள் சந்திப்பு</strong></p>
<p>தஞ்சாவூர், ஏப். 3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக என். அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சார்பில், ஒன்றியப் பொறுப்பாளரும், மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான ஆர். மனோகரன் தலைமையில், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், மூத்த தோழர் வீ. கருப்பையா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
<p> </p>
