சிபிஎம் நிர்வாகி குடும்பத்தினர் மீது ரவுடிகள் தாக்குதல்! காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>சிபிஎம் நிர்வாகி குடும்பத்தினர் மீது ரவுடிகள் தாக்குதல்! காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, மார்ச் 13- திருநாவலூர் அருகே சிபிஎம் நிர்வாகி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளைக் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பேச்சு வார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை அடுத்த வாணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னரான இவரது வீட்டிற்குள் புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் வேல்முருகனின் மனைவியும், இதய நோயாளியுமான கவிதா கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது மூக்குத் தண்டுவடம் உடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து திரு நாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட தால், ஆத்திரமடைந்த அதே ரவுடி கும்பல் மீண்டும் வேல்முருகன் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து இரண்டு புகார்கள் அளித்தும், குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருநாவலூர் காவல்துறை மெத்தனம் காட்டி வந்தது. இதனைக் கண்டித்து, சிபிஎம் ஒன்றியக் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் திருநாவலூர் காவல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 13) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்று, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.அலமேலு, கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயகுமார், மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.ஆனந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.</p>
