சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்
7 Mar 2026, 2:36 pm
<p><strong>சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்</strong></p>
<p>கோவை, மார்ச் 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகரக் குழு சார்பில் கட்சி நிதி தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கோவை சுந்தரம் வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் எம். ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்றார். எம். ரங்கராஜ் வரவேற்றார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்தி ரன், வி.ராமமூர்த்தி, மேற்கு நகரச் செயலாளர் பி.சி.முருகன், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. செந்தில் பிரபு, தங்க நகை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். முன்னதாக, மேற்கு நகரக்குழு விற்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக மார்க் சிஸ்ட் கட்சியினர் தேர்தல் நிதியாக வசூலித்த தொகை ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 200ஐ நகரக்குழு உறுப்பினர் பி. மருதன் தலைவர்க ளிடம் வழங்கினார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கே.முத்து குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், நகரக்குழு உறுப்பினர் என். பரமசிவம் நன்றி கூறினார்.</p>
