சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு பேரவைக் கூட்டம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு பேரவைக் கூட்டம்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 10- பென்னாகரத்தில் நடைபெற்ற சிபிஎம் தேர்தல் நிதிய ளிப்பு கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கார்ல் மார்க்ஸ் திரு மண மண்டபத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பேரவைக் கூட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். அப்போது, தேர்தல் நிதியாக ரூ.1.05 லட்சம் கட்சி தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விஸ்வ நாதன், ஜி.சக்திவேல், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆ. ஜீவானந்தம், பி.ஆர்.செல்வம், எம்.தங்கராஜ், ஆர்.சக்தி வேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.ராஜி, எம்.குமார், என். பி.முருகன், வி.ரவி, கே.அன்பு, ஆர்.சின்னசாமி, வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
