காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்
8 Apr 2026, 5:30 am

காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர், ஏப். 7- காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பணிக்குழு கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் இரா.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முத்தூர், மாலை 5 மணிக்கு வெள்ளக்கோவில் நத்தக்காடையூர், இரவு 7.30 மணிக்கு வெள்ளக்கோவில் கடை வீதி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 13ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு காங்கேயம் களிமேடு, மாலை 5 மணிக்கு நத்தக்காடையூர், மாலை 7 மணிக்கு காங்கேயம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.