தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செதுக்கரையில் புதிய ரேசன் கடை அமைக்கக் கோரி சிபிஎம் - தேமுதிக ஆர்ப்பாட்டம்

2 Nov 2026, 12:22 am
செதுக்கரையில்  புதிய ரேசன் கடை அமைக்கக் கோரி  சிபிஎம் - தேமுதிக ஆர்ப்பாட்டம்
<p><strong>செதுக்கரையில் புதிய ரேசன் கடை அமைக்கக் கோரி சிபிஎம் - தேமுதிக ஆர்ப்பாட்டம்</strong></p><p>குடியாத்தம், நவ. 1-வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா செதுக்கரை ஜீவா நகரில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும், நிரந்தரப் பணியாளரைநியமிக்க வேண்டும், ரேஷன் கடை இட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் மற்றும்சிவபார்வதி நகர் சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மற்றும் தேமுதிக சார்பில் செதுக்கரை நேருஜிநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா குழுஉறுப்பினர் எம். அண்ணாமலை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ். சண்முகம், ஜி. மார்க்கபந்து, கே. பிச்சாண்டி, எம்.விநாயகம், ஆர். முருகன், கே. சிவாஜி, ஏ.சுகுமார், எஸ். கணேசன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.டி. சங்கரி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.</p><p>சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ. ஏகலைவன், கே. சாமிநாதன், பி. காத்தவராயன், பேர்ணாம்பட்டு-குடியாத்தம்(தெற்கு) இடைக்கமிட்டிச் செயலாளர் சி. சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி. குபேந்திரன், பி.குணசேகரன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர். பாபு, எம். ராஜா,சி. தசரதன், தேமுதிக ஒன்றியச் செயலாளர் ஏ. மணிகண்டன், நிர்வாகிகள் எஸ். தாமோதரன், அர்ச்சுனன், ரமேஷ், எஸ். தாமோதரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.சிபிஎம் தாலுகாசெயலாளர் எஸ்.சிலம்பரசன் நிறைவுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.