சிபிஎம் மாவட்டச் செயலாளரிடம் அராஜகம் காவல் ஆய்வாளர் மீது எஸ்பியிடம் புகார்
24 Jul 2026, 12:00 am
<p><strong>சிபிஎம் மாவட்டச் செயலாளரிடம் அராஜகம் காவல் ஆய்வாளர் மீது எஸ்பியிடம் புகார்</strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை23- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் தில்லியில் போராடும் மாண வர்களுக்கு ஆதரவாக, செங்கல்பட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று மாலை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடக்கிவைத்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணாவிடம், செங்கல் பட்டு நகரக் காவல் ஆய்வா ளர் கார்த்திக் கணேஷ் அராஜக முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் பாரதி அண்ணா அளித் துள்ள புகார் மனுவில், காவல் ஆய்வாளர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றிப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துத் தள்ளி னார். தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்றும், செயற்கை மூட்டு பொருத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியும், சக தோழர்கள் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அநாகரிகமாக நடந்து கொண்டார். எனவே, ஜன நாயக வழியில் போராடிய வர்கள் மீது அராஜகம் செலுத்திய காவல் ஆய்வாளர் கார்த்திக் கணேஷ் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அளிப்பின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், பகுதிச் செயலாளர்கள் கே.வேலன், ரபீக் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.</p>
