திமுக கூட்டணி எட்டு தொகுதியிலும் வெற்றி பெறும் செயல் வீரர் கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் உறுதி
2 Apr 2026, 3:50 pm
<p><strong>திமுக கூட்டணி எட்டு தொகுதியிலும் வெற்றி பெறும் செயல் வீரர் கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் உறுதி</strong></p>
<p>கும்பகோணம், ஏப். 2- மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், கும்ப கோணம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் க. அன்பழகனை ஆதரித்து, திமுக கூட்டணி கட்சிகள் செயல் வீரர் கூட்டம் கும்பகோ ணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செ. ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னதாக திமுக கும்ப கோணம் மாநகரக் கழகச் செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.ப தமிழழகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, சிபிஐ எம் எல் மாநில குழு உறுப்பினர் ஆர். மதியழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிறப்புரையாற்றினார் அப்போது கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல திட்டங்களை கொண்டு வந்து மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளது. குறிப்பாக மகளிர் உதவி தொகையை உரிமை தொகையாக அறிவித்தது. ஆரம்பத்தில் பிஜேபி போன்ற எதிர்கட்சிகள் கிண்டல் செய்தன. ஆனால் கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்கும் அறிவித்து வருகின்றனர் இந்த வருடம் மூணே கால் லட்சம் மெட்ரிக் டன் நெல் சாகுபடி அதிகமாக உள்ளது. ஆனால், அவ்வளவு நெல்லையும் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. விவசாயிகளுக்காக இருக்கிறேன் என்று சொல்லும் மோடி, நெல் ஈரப்பதத்தை குறைக்க எதிர்க்கட்சிகளும், திமுக அரசும் வலியுறுத்தியது. ஆனால் ஈரப்பதம் குறைவாக உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இந்தியாவிற்கு முன்மாதிரி திட்டமாக தேர்தல் அறிக்கை என்பது உள்ளது இதனை திமுக அரசின் கதாநாயகனாக இருக்கிறது என தெரிவித்து ள்ளார். ஆகவே மதசார்பற்ற கூட்டணிக் கட்சியாக செயல்பட்டு வருகிறது தஞ்சை மாவட்டத்தில் எதிர்க்கட்சியாக ஒரே ஒரு தொகுதி கருதப்பட்டது. அண்ணன் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். ஆகவே எதிரிகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று எட்டுக்கு எட்டு என்று தமிழகத்திலே மகத்தான வெற்றி பெறும். அதே போல கும்பகோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் க அன்பழகன் போட்டி யிடுகிறார். அவர், மக்களு க்கான பல்வேறு திட்ட ங்களைச் செய்துள்ளார். எனவே, அவர் பெருவாரி யான வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெறுவார் அதற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளித்து வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும்’’ என தெரிவித்தார்.</p>
