தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மடத்துக்குளத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல சிபிஎம் வலியுறுத்தல்!

2 Oct 2026, 1:11 am
மடத்துக்குளத்தில் அனைத்து ரயில்களும்  நின்று செல்ல சிபிஎம் வலியுறுத்தல்!

மடத்துக்குளத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல சிபிஎம் வலியுறுத்தல்!

உடுமலை, அக்.1–திண்டுக்கல் – பாலக்காடு அகல ரயில் பாதையில் அமைந்துள்ள மடத்துக்குளம் ரயில் நிலையத்தை சீரமைத்து, இவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சிபிஎம் மடத்துக்குளம் தாலுகா குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மடத்துக்குளம்தாலுகாவில் 4 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் உள்ளன. 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சர்க்கரை ஆலை, பேப்பர் மில்கள், நூற்பாலைகள்மற்றும்கறிக்கோழி நிறுவனங்கள் எனப் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது இங்கு புதிய நடைமேடை, கட்டடம்,குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், தொடர் புறக்கணிப்பு மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக தற்போது ரயில் நிலைய வளாகம்புதர் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. நடைமேடைகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி, கட்டடங்களும் பாழடைந்து வருகின்றன.

தற்போது இவ்வழித்தடத்தில் சென்னை, அமிர்தா, திருச்செந்தூர், பாலக்காடு, தூத்துக்குடி, மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், கோவை – மதுரை பயணிகள் ரயில் மட்டுமே மடத்துக்குளத்தில் நின்று செல்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் உடுமலை அல்லது பழனி ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. எனவே, பாழடைந்து கிடக்கும்மடத்துக்குளம் ரயில் நிலையத்தை உடனடியாக சீரமைத்துபராமரிக்க வேண்டும். மேலும் சென்னை, அமிர்தா, திருச்செச்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மடத்துக்குளத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.