தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத் தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களின் வாக்குரிமையை உறுதி செய்ய சிபிஎம் கோரிக்கை

5 Apr 2026, 3:36 pm
கேரளத்  தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களின் வாக்குரிமையை உறுதி செய்ய  சிபிஎம் கோரிக்கை
<p><strong>கேரளத் &nbsp;தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களின் வாக்குரிமையை உறுதி செய்ய &nbsp;சிபிஎம் கோரிக்கை</strong></p> <p>திருவனந்தபுரம் புதிய தேர்தல் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் காரணமாக, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் வாக்குரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் அளித்துள்ள மனுவில்,&rdquo;கேரளத்தில் தபால் வாக்கு (Postal Ballot) வசதி நீக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறை தெளிவற்றதாகவும், சிக்க லானதாகவும் உள்ளது. தேர்தல் பணி, இதர தொடர்புடைய பணிகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளில் ஈடு பட்டுள்ள ஊழியர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டிய அதிகாரிகள், இந்தப் புதிய முறையிலுள்ள குளறுபடி களைக் கண்டு கொள்ளாமல் உள்ளனர். தபால் வாக்குகள் தொடர்பாக ஒரு ஒருங்கிணைந்த மற்றும் வெளிப்படை யான வழிகாட்டுதலை வழங்கத் தேர்தல் அதிகாரிகள் முன்வரவில்லை. தேர்தல் பணியில் உள்ள எத்தனை அதிகாரிகள் தபால் வாக்குக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற தரவை ஆணையம் வெளியிட வேண்டும். அத்தியாவசியச் சேவைக ளில் உள்ள ஊழியர்கள் தங்கள் சொந்தத் தொகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்து விட்டு, மீண்டும் பணிக்குத் திரும்புவது கடினம். ஏனெனில் பலரது தொகுதிகள் தொலைதூர மாவட்டங்களில் உள்ளன. &nbsp;ஒருவேளை அவர்கள் அங்கு சென்ற டைந்தாலும், வாக்குச்சீட்டு இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நிலைப்பாடு, பெருமளவிலான வாக்கு கள் மறுக்கப்படும் சூழலை உருவாக்கி யுள்ளது. &nbsp;இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்&rdquo; என வலி யுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.