சேறும் சகதியுமாய் உள்ள வாய்க்கால் கரை பாதை: தார்சாலையாக மாற்றித்தர சிபிஎம் கோரிக்கை
12 Nov 2025, 3:20 pm
<p><strong>சேறும் சகதியுமாய் உள்ள வாய்க்கால் கரை பாதை: தார்சாலையாக மாற்றித்தர சிபிஎம் கோரிக்கை</strong></p>
<p>உடுமலை, நவ.12- உடுமலை பிரதான கால்வாய் கரைப்ப குதி மண் சாலையை தார் சாலையாக மாற்றித் தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புத னன்று உடுமலை வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, உடு மலை குரல்குட்டையில் இருந்து அரசு கலைக் கல்லூரி செல்லும் சாலை முடிவடையும் பிஏபி வாய்க்கால் கரைப் பாதை முதல் எலையமுத் தூர் சாலை வாய்க்கால் பாலம் வரை சுமார் 350 மீட்டர் தூரம் மிகமோசமாக குண்டும் குழி யுமாக சேறும் சகதியாக மாறிவிட்டது. இந்த பாதையை குரல்குட்டை ஊராட்சி மக்கள் மட்டுமல்லாது, அதன் அருகில் உள்ள ஆலாம்பாளையம், குருவப்பநாய்க்கனூர் உட்பட பொதுமக்கள், விவசாயிகள், அரசு கல்லூரி, பள்ளி மாணவர்கள் உடுமலை நக ருக்கு செல்ல பயன்படுத்துகின்றனர். இதுகு றித்து கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற குரல்குட்டை கிராம சபைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பின்னர் பிஏபி பாசனத் திட்ட நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியா ளரிடம் வாய்க்கால் கரையில் 12.700 மீ முதல் 13.050 மீ வரை சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுக்கப்பட்டது. எனவே உடனடியாக குரல்குட்டை இணைப்பு சாலையிலிருந்து எலையமுத்தூர் சாலை வரை சுமார் 350 மீட்டருக்கு மக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு வாய்க்கால் கரையில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ் மற்றும் கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
