உடுமலை நகராட்சி இடத்தில் மனமகிழ் மன்ற கட்டடம் மருத்துவ சிகிச்சை மையமாக மாற்ற சிபிஎம் கோரிக்கை
31 Dec 2025, 3:37 pm
<p><strong>உடுமலை நகராட்சி இடத்தில் மனமகிழ் மன்ற கட்டடம் மருத்துவ சிகிச்சை மையமாக மாற்ற சிபிஎம் கோரிக்கை</strong></p>
<p>உடுமலை, டிச.31- உடுமலை அரசு மருத்துவம னையை விரிவாக்கம் செய்யும் வகை யில், பழைய கட்டிடங்களை இடித்து வருவதால், மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், மருத் துவமனைக்கு எதிரில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மனமகிழ் மன்ற கட்டிடத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ள னர். உடுமலை அரசு மருத்துவ மனைக்கு எதிரில் நகராட்சிக்கு சொந்தமான 97 சென்ட் பரப்பளவு இடத்தில் பல வருடங்களாக, வசதி படைத்த சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து மனமகிழ் மன்றம் என்ற பெய ரில் வணிக நோக்கில் கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து வருகின்ற னர். இது நகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பாக உள்ளது என கடந்த 2017 (11.04.2017) ஆம் ஆண்டு நகராட்சி ஆணையர் சரவணக்குமார் மூன்று அறைகளுக்கு சீல் வைத்தார். பின் னர் ஆய்வின்படி மே.16 ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியா பார நோக்கில் கட்டப்பட்ட கடைக ளுக்கும், மே.17 ஆம் தேதி முன் பகுதி கோட்டிற்கும் சீல் வைத்தார். அத்து டன் மனமகிழ் மன்றம் உள்ள அனைத்து பகுதிகளும் உடுமலை நகராட்சிக்கு சொந்தம் எனவும், விரைவில் இடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும் என தெரிவித்தார். ஆனால் இக் கட்டிடம் மற்றும் இடம் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வர வில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தண்டபாணி கூறும்போது, உடு மலை, மடத்துக்குளம் மற்றும் மலை வாழ் மக்கள் என தினமும் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் பயன்படுத் தும் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், மருந்துவம னையை விரிவாக்கம் செய்யும் வகை யில், 1971 மற்றும் 1975 ல் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களை இடித்து மீண் டும் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வரு கிறது. தற்போது இடிக்கப்படும் கட்டி டத்தில்தான் புறநோயாளிகள், உள் நோயாளிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கட்டிடம் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டதால், இங்கு செயல் பட்ட அனைத்து பிரிவுகளும் ஏற்க னவே இருந்த இரண்டு புதிய கட்டி டத்தில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கட்டி டத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தேவையை கருத் தில் கொண்டு அரசு மருந்துவம னைக்கு எதிரில் நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் மக்களுக்கு பயன்ப டாத மனமகிழ் மன்ற கட்டிடங்களை முழுமையாக அரசு மருந்துவமனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மன மகிழ் மன்ற கட்டிடங்களில் சிறப்பு சிகிச்சைப்பிரிவு அல்லது புற நோயா ளிகள் மருத்துவம் பார்க்கும் வகை யில் கட்டிடத்தை சுகாதாரத்துறை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்ய இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல போராட்டம் நடத்தியதன் விளைவாக, கடந்த 2021 ஆம் ஜூலை மாதம் பேரிடர் மேலாண்மை சட்டத் தின்படி மனமகிழ் மன்ற கட்டிடம் மற் றும் இடத்தில் கொரோனா பரிசோ தனை மையத்தையும், மருத்துவ மனை ஊழியர்கள் ஓய்வுக்கும் மற் றும் அரசு வாகனங்கள் என அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரு வாய் துறை நிர்வாகம் கொண்டு வந் தது. சிறப்பாக செயல்பட்டு வந்த சிறப் புப்பிரிவுகள் எந்த காரணமும் இல் லாமல் மீண்டும் மனமகிழ் மன்ற மாக செயல்பட்டு வருகிறது. அரசு இடத்தில் இருக்கும் மனமகிழ் மன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக விரிவாக்கம் செய்ய வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தாமதம் செய்யாமல் அரசு மருத்துவனையின் விரிவாக்கப் பணி களுக்கு இந்த இடத்தை பயன்ப டுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது என்றார்.</p>
