தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆக்கிரமிப்பை அகற்றிய இடத்தில், பட்டா பெற்ற மக்களுக்கு இடத்தை அளந்து தர சிபிஎம் கோரிக்கை

9 Mar 2026, 4:24 pm
ஆக்கிரமிப்பை அகற்றிய இடத்தில், பட்டா பெற்ற  மக்களுக்கு இடத்தை அளந்து தர சிபிஎம் கோரிக்கை
<p><strong>ஆக்கிரமிப்பை அகற்றிய இடத்தில், பட்டா பெற்ற &nbsp;மக்களுக்கு இடத்தை அளந்து தர சிபிஎம் கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், மார்ச் 9 - திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம் பாளையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய இடத்தில் ஏற்கெனவே பட்டா பெற்றிருக்கும் ஏழை, எளிய &nbsp;பட்டியலின மக்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இடத்தை அளந்து தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத் தில் திங்களன்று நடைபெற்ற மக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள் பட கட்சி அணியினர் மாவட்ட வரு வாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், அவிநாசி வட்டம் ஈட்டி வீரம்பாளையத்தில் க.ச.எண் 544/1இல் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற் றும் பட்டியலின மக்கள் 122 குடும் பத்தாருக்கு 1994ஆம் ஆண்டு இல வச வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. எனினும் நிலம் அளந்து தரப்படவில்லை. இதையடுத்து கடந்த 2024ஆம் &nbsp;ஆண்டு இம்மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பட்டாவுக்கு உரிய இடத்தை அளந்து தரக் கோரி &nbsp;மனு அளித்தனர். காத்திருக்கும் போராட்டம், குடியேறும் போராட் டம், நடைபயண இயக்கம் என பல் வேறு கட்டப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. பட்டாவுக்கு உரிய இடத்தை அளந்து தருவதாக அதிகாரிகளும் உறுதியளித்தனர். அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த இடம் கோயிலுக்குச் சொந்த மானது என்று ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் பயனாளிகள் தரப்பில் &nbsp;நிலத்தை அளவீடு செய்து தரக் &nbsp;கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட் டது. இந்த வழக்கில், நீதிமன்றம், கடந்த 2025 அக்டோபர் 17 அன்று, &nbsp;ஆக்கிரமிப்பை அகற்றி ஆறு வார காலத்தில் நிலத்தை அளந்து தர வேண்டும் என உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஜனவரி முதல் வாரத்தில் மேற்கண்ட இடத் தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதன் பிறகு இதுவரை நீதிமன்ற உத்தரவுப்படி ஏழை, எளிய மற்றும் &nbsp;பட்டியலின மக்களின் பட்டா நிலம் அளவீடு செய்து தரப்படவில்லை. அதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடி யாக அந்த மக்களுக்கு உரிய இடத்தை அளவீடு செய்து வழங்க &nbsp;வேண்டும் என வலியுறுத்தப்பட் டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.