குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
2 Jun 2026, 10:18 pm

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

நாமக்கல், ஜூன் 2- குமாரபாளையம் அருகே இரண்டு குழந்தைகளுக்கு பாலி யல் தொல்லை அளிக்கப்பட்ட சம்ப வத்தில் தொடர்புடைய நபர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக் காத வகையில் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில், குமாரபாளையம் அருகே 12 வயது சிறுமி மற்றும் 3.5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மணி மற்றும் வரத ராஜ் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ள நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.ஆர்.முருகேசன், நகரச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம். சக்திவேல், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பவித்ரா தேவி, மாவட்டத் தலைவர் பி.ராணி, செய லாளர் எம்.செல்வராணி, மூத்த தலைவர் எஸ்.ஆறுமுகம் உள் ளிட்ட பலர் குமாரபாளையம் அரசு மருத்துவமனை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். மேலும், குமாரபாளையத்தில் கஞ்சா, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளதால் குற்றச்செயல் கள் நடைபெறுவதால், காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தைக ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவ டிக்கை எடுத்து உரிய தண்டனை கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வறு அதில் வலியு றுத்தப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் பேட்டி

குமாரபாளையத்தில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சம்பவங்க ளில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று இரவு மருத்துவமனைக்கு சென்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜய லட்சுமி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் பாதுகாப்பாக வழங்கப்பட வேண் டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்பின் செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர், குழந்தைகள் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் முதல்வர் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் மற் றும் மாவட்ட ஆட்சியருடன் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.