4 வழிச்சாலைப் பணிகளை முழுமையாக முடித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும்
20 Jun 2026, 11:16 pm

4 வழிச்சாலைப் பணிகளை முழுமையாக முடித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும்

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 20- தேசிய நெடுஞ்சாலை 744-ல் நடை பெற்று வரும் 4 வழிச்சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎம் மாவட்டக்குழு கூட்டம் இராஜ பாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில் கூறப்பட்டுள்ளதாவது: திருமங்கலம்–செங்கோட்டை இடையே யான தேசிய நெடுஞ்சாலை 744-ஐ 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் அழகாபுரி, சுப்புலாபுரம், டி. புதுப்பட்டி, சேடபட்டி விலக்கு, டி. கல்லுப்பட்டி பைபாஸ் மற்றும் குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம் பாலப் பணிகள் இன்னும் நிறைவடைய வில்லை. மேலும், பல இடங்களில் பழைய சாலைகளை புதிய 4 வழிச்சாலையுடன் இணைக்கும் பணிகளும் முழுமையாக முடிக்கப்படவில்லை. நெடுஞ்சாலைப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூட்டு ஆய்வு நடத்தி, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது நடைமுறையாகும். ஆனால், இவ்விதிமுறைகளை பின்பற்றா மல், பணிகள் முழுமையடையாத நிலையி லேயே கடந்த ஜூன் 15 முதல் நத்தம்பட்டி அருகேயுள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் கப்பலூர் சுங்கச்சாவடியிலிருந்து நத்தம்பட்டி சுங்கச் சாவடி வரை சுமார் 49 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருப்பதாகவும், இது விதிமுறை மீறலாகும் என்றும் சிபிஎம் குற்றம்சாட்டி யுள்ளது. இந்த சுங்கக் கட்டண வசூல் சிறிய மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள், வணி கர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும், எனவே சுங்கக் கட்டண வசூலை உடனடியாக நிறுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சரக்கு வாகன உரிமை யாளர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.