கழிவுநீர் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை!
16 Jun 2026, 12:03 am
<p><strong>கழிவுநீர் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை!</strong></p><p>அவிநாசி,ஜூன்15- திருமுருகன் பூண்டி நகராட்சி 10- ஆவது வார்டில் ஏற் பட்டுள்ள கழிவுநீர் சுத் திகரிப்பு கால்வாய் அைப்பை உடனடி யாகச் சீரமைக்க வேண்டும் என சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் சுப்பிர மணியம் கோரிக்கை விடுத்துள்ளார். நகராட்சிக்குட் பட்ட 10 ஆவது வார்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கும் நிலை யில், ஆறு மாதங்க ளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பில் கழிவுநீர் சுத்திக ரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இது கட்டப்படும் போதே இடிந்து விழுந்ததால், தரமாக அமைக்கக் கோரி சிபிஎம் நகராட்சி கிளை வலியுறுத்தியிருந்தது. தற்போது இத்தொட்டியில் செடிகள் நடப்பட்டு, கழிவுகள் வெளியேற வளைவுகள் அமைக்கப்பட் டுள்ளதால் சாக்கடை நீர் தேங்கி அச்சுற்றுவட்டாரத் தில் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலத்திற்கு முன்பாக நக ராட்சி நிர்வாகம் தலையிட்டு, சாக்கடை நீர் எளிதாக வெளியேறும் வகையில் கால்வாயை உடனடி யாகச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்களும், சிபிஎம் உறுப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
