உயர்கோபுர தண்ணீர் தொட்டியை சீர் செய்ய சிபிஎம் கோரிக்கை
20 Feb 2026, 2:39 pm
<p><strong>உயர்கோபுர தண்ணீர் தொட்டியை சீர் செய்ய சிபிஎம் கோரிக்கை</strong></p>
<p>திருவாரூர், பிப்.20- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் நெடுஞ்சேரி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெரு அருகிலுள்ள உயர்கோபுர தண்ணீர் தொட்டி மிகவும் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் தலைவருக்குத் தெரிவித்தனர். இதனை அடுத்து தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் கூறுகையில், “மோசமான நிலையில் தண்ணீர் தொட்டியின் கான்கிரீட் தூண்கள் உள்ளன. இதனால் விபத்து ஏதும் நிகழ்ந்து விடுமோ என இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆகவே பெரும் விபத்து நிகழும் முன்பாக ஊராட்சி நிர்வாகம் இதனை கள ஆய்வு செய்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார். ஆய்வின்போது, குடவாசல் தெற்கு ஒன்றியத் செயலாளர் டி.லெனின் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p>
