சென்னை வியாசர்பாடியில் 41 குடும்பங்களுக்கு வாடகைத் தொகை வழங்க சிபிஎம் கோரிக்கை
14 Jun 2026, 12:56 am

சென்னை வியாசர்பாடியில் 41 குடும்பங்களுக்கு வாடகைத் தொகை வழங்க சிபிஎம் கோரிக்கை

சென்னை வியாசர்பாடியில் 41 குடும்பங்களுக்கு வாடகைத் தொகை வழங்க சிபிஎம் கோரிக்கைவீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு வசித்து வந்த 41 குடும்ப ங்களுக்கு அரசால் அறி விக்கப்பட்ட தற்காலிக வாடகை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், சென்னை வியாசர்பாடி பகுதிக்கு உட்பட்ட 51ஆவது வட்டத்தில் உள்ள கிழக்கு கல்லறை சாலை பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு (முன்னாள் குடிசை மாற்று வாரியம்) சொந்தமான 928 அடுக்குமாடி குடியி ருப்புகள் இருந்தன.

இந்த வீடுகளில் அப்பகுதி மக்கள் கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்தனர்.

பழமையான இந்த அடுக்குமாடி குடியிருப்பு களை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய நவீன அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டும் பணிகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

இதனால் அங்கிருந்த மக்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இவ்வாறு தற்காலிக மாக வாடகை வீட்டில் வசிப்பதற்காக, பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசு சார்பில் தலா 24 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறி விக்கப்பட்டிருந்தது.

மொத்தம் உள்ள 928 குடும்பங்களில், பெரும்பா லோருக்கு இந்த தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் 41 குடும்பங்களுக்கு இந்த வாடகை தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராய புரம் பகுதிக்குழு சார்பில், சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து தகுந்த ஆவணங்களுடன் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவ ணங்களையும் ஒப்படைத்த பின்னரும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே தாங்கள் தலை யிட்டு, விடுபட்டுள்ள 41 ஏழைக் குடும்பங்களுக்கும் வாடகைத் தொகை 24 ரூபாய் விரைந்து கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதில் பகுதிச் செய லாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், எம்.அண்ணாமலை, ஜி.குப்புசாமி, கே.சர வணன், எம்.ஜோதிபாசு ஆகி யோர் கலந்து கொண்டனர்.