பொதுச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர்: உடனடியாக அகற்ற சிபிஎம் கோரிக்கை!
18 hours before

பொதுச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர்: உடனடியாக அகற்ற சிபிஎம் கோரிக்கை!

செங்கல்பட்டு, ஆக. 23செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, வையாவூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்தபடவேட்டம்மன் கோயில் தெருவை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குறுக்கே தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளார். இதனால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும், பலகட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் எதிர் தரப்பினருக்குப் பிரிவு 7 மற்றும் பிரிவு6-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி, குறுக்கே கட்டப்பட்டுள்ள சுவரை அகற்ற கடந்தஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காவல்துறை அதிகாரி மிரட்டல்

இந்தச் சூழலில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும், சிபிஎம் கட்சிநிர்வாகிகளையும் அழைத்து, இனிமேல் அந்த வழியில் செல்லக்கூடாது என்றும், மாற்று வழியில்தான் செல்ல வேண்டும் என்றும், மீறினால் அனைவரும் சிறைக்குச் செல்ல நேரிடும்என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் மீதும்,மார்க்சிஸ்ட் கட்சியினர் மீதும் எதிர்தரப்பினர் பொய் புகார்களை அளித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த முனியன் என்பவர் கடந்த 1974-ஆம் ஆண்டே அந்தச் சாலையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எழுத்துப்பூர்வமாகஎழுதிக் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு ஆவணங்கள் இருந்தும், அரசு நிர்வாகம் தனிநபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

அடாவடித்தனமான அணுகுமுறையை ஏற்க முடியாது

பெ.சண்முகம் ஆவேச பேட்டி பொதுச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஞாயிறன்று நேரில்

ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஊர் மக்கள் நலன் பெற வேண்டும், ஊர் மக்களுக்கு பாதை வேண்டும் என்பதற்காக அரசுக்கு எழுதிக் கொடுத்த நிலத்தை, தங்களுக்குச் சொந்தமானது என்று சட்டவிரோதமான முறையில் அடாவடித்தனமான அணுகுமுறையை அந்த நபர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகத் தலையிட்டு, வருவாய்த் துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.கடைசியாக மாவட்ட ஆட்சித் தலைவர், ‘இது பொதுப்பாதை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்’ என்று சொல்லிஇறுதியாக உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.ஒரு பொது நோக்கத்திற்காக நிலத்தை வழங்கியதை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.

இந்தப் பாதையை அடைத்த காரணத்தினால், அப்பகுதியில் வாழும் மக்களின் கழிவுநீர் கூட செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளதை நேரில் பார்த்தோம். சாலை தடுப்புச் சுவர் அமைத்து அடைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக் கேடும் ஏற்படும்அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் அடிப்படையில் இந்தப்பாதையை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார் சண்முகம். இந்த ஆய்வின்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்டஉறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் அனுசியாமற்றும் மாவட்ட செயலாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.