சாதியின் பெயரில் உள்ள ஊரின் பெயர்களை நீக்கி, சாதித்த தலைவர்களின் பெயரை சூட்ட சிபிஎம் கோரிக்கை
14 Jun 2026, 1:34 am
<p><strong>சாதியின் பெயரில் உள்ள ஊரின் பெயர்களை நீக்கி, சாதித்த தலைவர்களின் பெயரை சூட்ட சிபிஎம் கோரிக்கை</strong></p><p>ஈரோடு, ஜூன் 13- பட்டியலின மக்களின் உணர்வு களை பாதிக்கும் வகையில், ஊர்களுக்கு சூட்டப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்கி விட்டு, மக்களின் நலனுக்காக காலமெல் லாம் உழைத்த தலைவர்களின் பெயரை சூட்ட வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன் தலைமை யில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன் உட்பட பலர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், ஈரோடு தாலுகா, காளிங்கராயன் பாளை யம் அருகில் மேட்டுநாசுவம்பாளை யம் ஊராட்சி எனவும், அதன் அருகா மையில் எலவமலை ஊராட்சியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகு தியை வட்டக்கல்சேரி எனவும் பெயர் வைத்து அழைக்கப்படு கிறது. இதனால் அந்த மக்களின் உணர்வு பாதிக்கப்படுகிறது. சாதிய ரீதியாக அடையாளப்படுத்துவதன் மூலம் அந்த மக்களை மரியாதை குறைவாக பார்க்கப்படும் நிலை யும் உள்ளதாக கருதுகின்றனர். காலனி பெயரிலான பெயர்களை நீக்க முந்தைய அரசு உத்தர விட்டதைப் போல தற்போதைய தமிழ்நாடு தவெக அரசும் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் இருக்கும் ஊரின் பெயர்களை அரசு ஆவணங்களில் இருந்து நீக்கி விட்டு, மக்களின் நலனுக்காக உழைத்து சாதித்த தலைவர்களின் பெயரைச் சூட்ட வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய அரசா ணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.</p>
