பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்!
15 May 2026, 11:25 am

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முக வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கி, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். என தெரிவித்துள்ளார்