பட்டியலின மக்களுக்கு பட்டா: சிபிஎம் கோரிக்கை
7 Oct 2026, 12:24 am
<p><strong>பட்டியலின மக்களுக்கு பட்டா: சிபிஎம் கோரிக்கை</strong></p><p>உடுமலை, அக். 6– உடுமலைப்பேட்டை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி உரல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலினமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் வட்டாட்சியரிடம் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டது.உரல்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இதில் சொந்த இடம் இல்லாத ஏழை மக்கள், வாடகை வீடுகளில் வசித்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, உரிய ஆய்வு நடத்தி தகுதியான அனைவருக்கும் அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>வட்டாட்சியர் அருணாவிடம் சிபிஎம்ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், நிர்வாகிகள் அருண்பிரகாஷ், தமிழ்த்தென்றல், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கருப்புசாமிமற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.</p>
