தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் உடனடியாக திறக்க சிபிஎம் கோரிக்கை

14 Nov 2025, 1:26 pm
பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் உடனடியாக திறக்க சிபிஎம் கோரிக்கை
<p><strong>பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் உடனடியாக திறக்க சிபிஎம் கோரிக்கை</strong></p> <p>நாமக்கல், நவ.14- நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள ஏலூர் கிராமத் தில், புதிதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளா கம், ஆறு மாதங்களாகப் பூட்டியே கிடப்பதால் மக் கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஏலூர் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. விசைத்தறி மற்றும் விவ சாயம் பிரதான தொழிலாக விளங்கும் இந்த கிராமத் தில், தெற்குத் தெருவில் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் வரையறுக்கப்பட்ட திட் டத்தின் கீழ், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயன் படும் வகையில், ரூ.7,85,000 மதிப்பீட்டில் 2024-25 நிதி யாண்டில் இந்தச் சமுதாய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும், கட்டிடம் பயன்பாட் டுக்கு தயாராகி ஆறு மாதங்கள் ஆகியும், இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், அத்தி யாவசியத் தேவைகளுக்காகப் பொதுமக்கள் மிகவும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். &nbsp;இது குறித்து ஏலூர் கிராமத்தின் முன்னாள் வார்டு உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ஜோதிமணி கூறுகையில், சுகாதார வளா கத்தை உடனடியாகத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு முறை நாமக் கல் மாவட்ட ஆட்சியருக்கும், புதுச்சத்திரம் வட்டார &nbsp;வளர்ச்சி அலுவலருக்கும் மனு அளித்தோம். ஆனால், &nbsp;இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித் தும், சுகாதார வளாகத்தை விரைந்து திறக்க வலியுறுத்தி யும், ஊர் பொதுமக்களை திரட்டி விரைவில் போராட் டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.