தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தடைபட்ட கலைஞர் கனவு இல்ல கட்டுமானம்: பணம் வழங்க அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

21 Jul 2026, 9:33 pm
தடைபட்ட கலைஞர் கனவு இல்ல கட்டுமானம்: பணம் வழங்க அரசுக்கு சிபிஎம் கோரிக்கை
<p><strong>தடைபட்ட கலைஞர் கனவு இல்ல கட்டுமானம்: பணம் வழங்க அரசுக்கு சிபிஎம் கோரிக்கை</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 21 - குமரி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல கட்டுமானப் பணிகளுக்கு, அரசு தரப்பில் பணம் வழங்கப்படாததால், அவை தடைபட்டு ஏழை-எளிய மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உறுதி யளித்த தொகையை உடனடியாக வழங்கிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் தலைமையில் திங்க ளன்று பார்வதிபுரம் அலுவல கத்தில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், மாவட்டச் செயலா ளர் என். எஸ். கண்ணன், மாவட்ட செயற்குழு, மாவட் டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் கன்னியாகுமரி மாவட்டத் தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2026-27-இல் 1937 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீடு கட்ட அரசாணை பெற்ற குடும்பத்தினர் தாங்கள் குடி யிருந்த வீடுகளை இடித்து கட்டுமானப் பணிகளை துவக்கினர். வெவ்வேறு கட்டங்களில் அரசு வழங்க வேண்டிய தொகை உரிய காலத்தில் வழங்கப்பட வில்லை. மழையிலும், வெயி லிலும் அவதிப்படும் நிலை யில், கடன்பட்டு வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இதுபோல் நகர் புறங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் பணம் வழங்கப்படவில்லை. வீடு கட்டும் திட்டங்களுக்கான தொகையை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.