தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு இலவச வீடு வழங்க சிபிஎம் கோரிக்கை கோட்டாட்சியரிடம் மனு

28 Oct 2026, 11:11 pm
பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு இலவச வீடு வழங்க சிபிஎம் கோரிக்கை கோட்டாட்சியரிடம் மனு

பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு இலவச வீடு வழங்க சிபிஎம் கோரிக்கை கோட்டாட்சியரிடம் மனு

திருக்கோவிலூர், அக்.28-உளுந்தூர்பேட்டை வட்டம் பர மேஸ்வரிமங்கலம், கீழப்பாளையம், சிறுபாக்கம், வெள்ளையூர், கூத்தனூர், காட்டுச்செல்லூர் ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பத்தினர் தார்ப்பாய், டிஜிட்டல் பேனர், கீற்று கொட்டகையில் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கிடக் கோரியும், இந்து ஆதியன் (எஸ்டி) சாதி சான்று கேட்டு பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும் கிடைக்காததால் கல்லூரி, தொழிற்கல்வி, பொறியியல் கல்வி உள்ளிட்ட படிப்புகளை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து தமிழக அரசு உடனடியாக இந்து ஆதியன் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்று வழங்கிட வேண்டும் என கோரிபுதன்கிழமை (அக் 28) திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திக்ராஜாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பூவராகன், ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.