விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை
3 Dec 2025, 2:59 pm
<p><strong>விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை</strong></p>
<p>நாமக்கல், டிச.3- கொல்லிமலையில் அடையாளம் தெரி யாத விலங்கு கடித்து ஆறு ஆடுகள் உயி ரிழந்து உள்ளதால், கால்நடைகளை வைத்து வாழ்வாதாரம் நடத்தி வந்த பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விவசாயிக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை மாவட்டத்தின் பிர சித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலியி ருந்தும், கேரளம், ஆந்திரா போன்ற மாநிலங் களிலிருந்தும் அதிகளவு சுற்றுலாப் பயணி கள் வருகை தருகின்றனர். இயற்கை வளங் கள் நிறைந்து காணப்படும் கொல்லிமலை யில், ஏராளமான விவசாயப் பணிகள் நடை பெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அதிகளவு வளர்த்து வருகின்றனர். கொல்லிமலை வட்டம் குண்டூர் நாடு மலை கஸ்பா பகுதி யில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விவ சாயி சிவாஜி என்பவர் ஏராளமான ஆடு களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் புதனன்று அதிகாலை வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அடை யாளம் தெரியாத விலங்குகள் கடித்துள் ளது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு விவ சாயி சிவாஜி ஓடிச் சென்று பார்த்த பொழுது 6 ஆடுகள் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப் பட்டது. இந்த விவகாரத்தில் விலங்குகளின் நட மாட்டத்தை கண்காணித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விவசாயி சிவாஜி கால்நடைகளை வைத்து வாழ்வாதாரம் நடத்தி வந்த நிலையில் தற்போது ஆடுகள் இறந்துள்ளதால் பொருளாதார பாதிப்புக்கு உட்பட்டு உள்ளார். எனவே இறந்து போன ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா குழு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
