காரைக்கால் கடற்கரை வரைவு மேலாண் திட்டத்தை ரத்து செய்க! சிபிஎம் வலியுறுத்தல்!
2 Nov 2026, 11:00 pm

காரைக்கால் கடற்கரை வரைவு மேலாண் திட்டத்தை ரத்து செய்க!

சிபிஎம் வலியுறுத்தல்!

புதுச்சேரி, நவ. 2 –காரைக்கால் வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தையும், வரும் நவம்பர் 25 அன்றுஅறிவிக்கப்பட்டுள்ள மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மீனவர்களுக்கு எதிரான குளறுபடி அறிக்கை

இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடுக் குழுமம் வெளியிட்டுள்ள திட்டவரைவு முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானது எனக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் மீனவ மக்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும்முன்வைத்த நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, குளறுபடிகள் நிறைந்த வரைவை மீண்டும்மக்கள் மீது திணிப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காரைக்காலில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட மணல் மேடுகளை மறைத்து வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதால், காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட பூர்வீகமீனவக் கிராமங்களின் இருப்பே கேள்விக் குறியாகியுள்ளது. மேலும் கீழகாசாக்குடி உள்ளிட்ட பகுதிகளில்மீனவர்கள் பாரம்பரியமாகக் கரைவலைத் தொழில் செய்யும் இடங்களைச் சுற்றுலாத் துறையின் கீழ் கொண்டுவந்துவாழ்வாதாரத்தைப் பறிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் கடல் வளங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கா?

அதானி துறைமுக விரிவாக்கம் மற்றும் கடலுக்குள் எண்ணெய்க் கிணறு தோண்டும் திட்டங்களுக்காகக் காரைக்காலின் கடல் வளங்களைப் பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சதியே இதன் பின்னணியில் உள்ளது. எனவே, புதுச்சேரி பாஜக - என்.ஆர். காங்கிரஸ் அரசு இந்த மோசடியான வரைவுத்திட்டத்தையும், போலியான கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.